வியாழன், 25 ஆகஸ்ட், 2011

பொருட்களின் விலையில் கண்கட்டு வித்தை!

பொருட்களின் விலையில் கண்கட்டு வித்தை!

சமீபகாலமாக நுகர்பொருள் துறையில் நடக்கும் தில்லாலங்கடி வேலையன்றை நண்பரொ ருவர் பகிர்ந்து கொண்டார். அவர் சொன்னது கொஞ்சம் புதுமையாகத்தான் இருந்தது. கடைக்குப் போனவர் வழக்க மாக வாங்கும் டூத் பேஸ்ட் டை வாங்கி வந்திருக்கிறார். அதில் ஏதோ வித்தியாசத் தை உணர்ந்தவர், என்னவெ ன்று பார்த் திருக்கிறார். ஆனா ல் பளிச்சென்று எந்த வித்தி யாசமும் தெரிய வில்லை. இருந்தும் விடாமல் துருவித் துருவி பார்த்தி ருக்கிறார். கடைசியில்தான் தெரிந்திருக்கிறது வழக்கமாக 50 கிராம் இருக்கும் அந்த பேஸ்ட் இப்போது 40 கிராம்தான் இருந்தி ருக்கிறது. இதனை யடுத்து வழக்கமாக வாங்கும் எல்லா பொருட் களையும் நோட்டம் விட ஆரம்பித்திருக்கிறார். அதிலும் அவருக்கு கிடைத்தது அதிர்ச் சிதான். கிட்டத்தட்ட பெரும்பாலான பொருட் களின் விலையில் இந்த கண்கட்டு வித்தை நடந்திருக்கிறது!
இதையடுத்து நாமும் களமிறங்கி விசாரித்த போது சோப்பு, பேஸ்ட், டீ தூள், முதற்கொண்டு மசா லா பொருட்கள் வரை அனைத்திலும் இந்த எடை  கட்டிங்’ வேலை ஓசையி ல்லாமல் நடந்திருப்பது தெரிய வந்தது. இந்த நிறு வனம், அந்த நிறுவனம் என்றில்லாமல் எல் லா நிறுவனங்களுமே இந்த உத்தியைக் கையாண்டிருக்கின்றன. விலை யை ஏற்றினால் விற்பனை குறைந்துவிடும் என்பதால், அள வு அல்லது எடையைக் குறைப்பதன் மூலம் தங்களின் பிஸினஸை தக்க வைத்துக் கொண் டிருக்கின்றன இந்த நிறுவனங்கள். ஆனால், எந்த நிறுவ னமும் நேர்மையாக நுகர்வோரிடத்தில் இதைச் சொல் லவில்லை.  
‘எந்த அறிவிப்பும் இல்லாமல் இப்படிச் செய்வது வாடிக்கையா ளர்களை ஏமாற்று கிற மாதிரி ஆகிவிடாதா?” என ஒரு முன்னணி பிராண்டின் விற்பனை உயரதிகாரியிடம் கேட்டோம்.
”எடை குறைப்பு செய்ததன் மூலம் வாடிக்கையாளரை நாங்கள் ஏமாற்றுவதாக எப்படிச் சொல்கிறீர்கள்? ஒரு பொருள் எவ்வளவு எடை கொண்டது, விலை என்ன என்பது போன்ற விஷயங்களைத் தெளிவாக அச்சடித்துதானே தருகிறோம்? வாடிக்கையாளர்கள் அதைப் பார்த்து விட்டுத்தானே வாங்கு கிறார்கள்? அவர்களுக்கு அந்த பொருள் தேவை. விலையும் அவர்களுக்கு சகாயமாக இருக்க வேண்டும். ஆனால், எடை கொஞ்சம் குறைந்தாலும் பராவாயில் லை என்றுதான் அவர்கள் வாங்குகிறார்கள். எனவே, ஏமாற்றும் எண்ணம் எங்களுக்கு இல்லவே இல்லை” என்றார்.
சில பிராண்டு பொருட்களில் எடை குறைத்ததோடு விலையையும் உயர்த்தி இருக்கிறார்கள். உதாரணமாக, மேனியை மிருதுவாக வைத்திருக்க உதவும் ஒரு சோப் முன்பு 100 கிராம் அளவில் கிடை த்தது. இன்று வெறும் 90 கிராம்தான் உள்ளது. ஆனால், விலை முன் பிருந்ததைவிட அதிகம். இதேபோல பாதுகாப்பு வளை யத்தைத் தரும் ஒரு பற்பசை முன்பு 50 கிராம் 10 ரூபாய். ஆனால், இன்றை க்கு அதே 10 ரூபாய்க்கு வெறும் 40 கிராம் மட்டுமே தருகிறார்கள். நூடுல்ஸுக்கு பெயர் போன அந்த பிராண்ட் முன்பு 100 கிராமுக்கு கொடுத்த விலையில், இப்போது 87 கிராம் மட்டுமே உள்ளது. 250 கிராம் என நினைத்து வாங்கும் மலரின் பெயர் கொண்ட டீ பாக்கெட் இப்போது 245 கிராம்தான் இருக்கிறது.  
”வழக்கமாக வாங்கும் பொருள், பழக்கப்பட்ட பிராண்ட் என்பதால், கண்ணை மூடிக்கொண்டு மக்கள் வாங்குகிறார்கள். தவிர சோப்பு, ஷாம்பு போன்றவற்றில் குறிப்பிட்ட பிராண்டுகளுக்கு பழகி விடுவ தால் இந்த பொருட்கள் விலையேறினாலும் வாங்கத்தான் செய் கிறார்கள். கலப்படப் பொருட்கள் மற்றும் தரமற்ற பொருட்கள் பற்றிய நுகர்வோர் விழிப்புணர்வு அதிகரிக்கத்தான் செய்திருக் கிறது. ஆனாலும், இந்த மாதிரியான எடை குறைப்பு சமாசார ங்களை மக்கள் பெரும்பாலும் கண்டுகொள்வதில்லை.” என்கிறார் தஞ்சை இ.பி. காலனி ஸ்ரீஹரி மளிகை செல்வகுமார்.
மூலப் பொருட்களின் விலை ஏறியதால், தாங்கள் தயார் செய்யும் பொருட் களின் விலையை உயர்த்தி யாக வேண்டிய கட்டாயம் நிறுவனங்களுக்கு இருக்கிறது தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் யாருக்கும் இல்லை. ஆனால், ஐந்து கிராம் ஆஃபர் கொடுத்தாலே டமாரம் அடிக்கும் இந்த நிறுவனங்கள், இதையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டியதுதானே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக