வியாழன், 30 ஏப்ரல், 2015

தொந்தி பிரச்சனைக்கு ஓமத்தில் இருக்கு தீர்வு


அஜீரணத்தையும் வயிற்றுக் கோளாறுகளையும் போக்கும் அரிய இயற்கை மருந்தாக ஓமம் பயன்படுகிறது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறுக்கு ஓமம் சிறந்த மருந்தாகும். 100 கிராம் ஓமத்தை ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் இப்பிரச்னை தீரும். உடல் பலம் பெறும்.
ஓமம், மிளகு வகைக்கு, 35 கிராம் எடுத்து நன்கு இடித்து பொடியாக்கி அதனுடன், 35 கிராம் பனைவெல்லம் சேர்த்து அரைத்து காலை, மாலை என இருவேளையும், 5 கிராம் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் பொருமல், கழிச்சல், வயிற்றுக் கடுப்பு நீங்கும்.
நல்ல தூக்கமும், நல்ல பசியும்தான் ஆரோக்கிய மனிதனுக்கு அடையாளம். இவை பறந்துபோனால் நோய்களின் கூடாரமாக உடல் மாறி, அதனால் மனமும் பாதிக்கப்படும். பசியைத் தூண்டி, உண்ட உணவு எளிதில் ஜீரணமாகவும், வயிறு தொடர்பான பிரச்னைகள் தீரவும், ஓமத்தை கஷாயமாக்கி குடிக்கலாம். குடலிரைச்சல், இரைப்பு, பல்நோய் இவற்றிற்கும் ஓமம் சிறந்த மருந்தாகும். ஓமத்திரவம் என்ற மாபெரும் மருந்து, ஆதிகாலம் தொட்டு இருந்து வருகிறது. குழந்தைகளின் சர்வரோக நிவாரணியே ஓமத் திரவம்தான். ஓமத்திரவம் வீட்டில் இருந்தால், சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயிறு உபாதையின்றி வாழலாம்.
ஓமத்தில் சூப் வைத்துக் குடித்தால் உடல் சோர்வு, நீங்கி சுறுசுறுப்பாகி விடுவோம். ஓம ரசம் செய்து, சூடான சாதத்தில் ஊற்றி, ஒரு சொட்டு நெய், ஊற்றி, உப்பில் ஊற வைத்த நார்த்தங்காயைத் தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் காய்ச்சல் ஓடி விடும். தினமும் ஓமத் தண்ணீர் குடித்தால், ஆஸ்துமா நோய் வரவே வராது. அரை டீஸ்பூன் ஓமத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக் குடித்தால் ஆஸ்துமா அண்டாது. வயிற்றில் செரிமானம் சீராகும்.
வயிற்று வலி ஏற்பட்டால், ஐந்து கிராம் ஓமத்துடன் சிறிது உப்பு, பெருங்காயம் சேர்த்துப் பொடித்து, தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சிறிது நேரத்தில் வயிறு லேசாகி விடும். நாட்டு மருந்து கடைகளில் ஓம எண்ணெய் கிடைக்கும். மூட்டு வலிக்கு இதைத் தடவினால் நாளடைவில் மூட்டு வலி குணமாகும். வயிற்றுக் கோளாறுகளுக்கு ஓமம் நல்லது.
ஓமப் பொடி சிறிது, உப்பு சிறிது ஆகியவற்றை மோரில் கலந்து குடித்தால், நெஞ்சில் பிடித்துள்ள சளி வெளியேறும். சுறுசுறுப்பின்றி சோம்பலாய் உட்கார்ந்திருப்பவர்கள் சிறிது ஓமத் தண்ணீர் குடித்தால், சோர்வு பயந்து ஓடி விடும்!. தினமும் இரவில் தூங்க போகும் போது அன்னாசிப்பழம் நான்கு துண்டுகள் மற்றும் ஓமப்பொடி இரண்டு ஸ்பூன், இவை இரண்டையும் தண்ணீரில் விட்டு கொதிக்க விட வேண்டும். நன்கு வெந்தவுடன் அப்படியே மூடிவைத்து விட வேண்டும். காலை 5:00 மணிக்கு அதனை நன்காக கரைத்து குடிக்க வேண்டும். இவ்வாறு, 15 நாட்கள் செய்து வந்தால் தொப்பை காணாமல் போய்விடும். ஒரு சிறந்த மருத்துவரின் ஆலோசனைகளுடன், இந்த வழிமுறைகளை பின்பற்றுவது நல்லது.

சிறுநீரகத்தில் கல்’ (Kidney Stone)இருந்தால், தவிர்க்க‍வேண்டிய 29 உணவுகள்


உங்கள் சிறுநீரகத்தில் கல் இருகிறதா? அப்ப‍டியென்றால், கட்டாயம் 29 வகையான உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவ
வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அவை எவையென பார்ப்போம்.
1. உப்பு 
2. பிஸ்கட்
3. சிப்ஸ்
4. கடலை
5.பாப்கான்
6. அப்பளம்
7. வடகம்
8. வற்றல்
9. ஊறுகாய்
10. கருவாடு
11. உப்புக்கண்டம்
12. முந்திரிபருப்பு
13. பாதாம்
14. பிஸ்தா
15. கேசரி பருப்பு
16. கொள்ளு
17. துவரம் பருப்பு
18. ஸ்ட்ராங் காபி, 
19. ஸ்ட்ராங் டீ
20. சமையல் சோடா
21. சோடியம் பை& கார்பனேட் உப்பு
22. சீஸ்
23. சாஸ்
24. க்யூப்ஸ் 
25. கோக்கோ
26. சாக்லேட்
27. குளிர்பானங்கள்
28. மது 
29. புகையிலை 
ஆகிய 29உணவுகளை கட்டாயம் தவிர்க்க‍வேண்டும்

திங்கள், 20 ஏப்ரல், 2015

உலர்திராட்சை



நாட்டு மருந்து கடைகளிலும் மளிகை கடைகளிலும் எளிதாக கிடைக்கக் கூடியதுமான உலர் திராட்சை. இந்த உலர் திராட்சை, நமது ஆரோக்கிய த்திற்கு ஏற்ற‍
உணவாகவும் பயன்படுகிறது. அத்தகைய ஒரு பயனைத்தான் நீங்கள் கீழே பார்க்க‍விருக்கிறீர்கள்.
எலும்பு மஞ்ஜைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாற்றினை விழுங்கினால், நமது உடலில் உள்ள‍ எலும்பு மஞ் ஜைகள் பலமடைந்து இரத்தம் அதிகம் சுரக்கும். மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
மேலும்  ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமாகும். இதில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

திங்கள், 13 ஏப்ரல், 2015

சளி, இருமல் போக்கும் அகத்திக்கீரை சாறு

Posted By Muthukumar,On April 13,2015

சளி, இருமல் தொல்லைகள் எல்லோருக்கும் சர்வ சாதாரணமாக வரக்கூடிய பிரச்னையாகும். இதை குணமாக்க ஆங்கில மருந்துகளை விட இயற்கை மருத்துவம் சிறந்ததாகும். இருமல், இளைப்பு, ஆஸ்துமா ஆகியவை குணமாக, தொண்டை வேரை இடித்து நல்லெண்ணெய்யில் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் மூக்கடைப்பு, தொண்டைக்கட்டு, தலைவலி ஆகிய நோய்கள் குணமாகும்
ஆடாதொடை வேர், கண்டங்கத்திரி வேர், திப்பிலி ஆகிய மூன்றையும் ஒன்றாக பொடி செய்து சாப்பிட்டால் இருமல் நிற்கும். ஆடாதொடை இலையை பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் சளித்தொல்லை தீரும். அவரை இலைச்சாற்றை துணியில் நனைத்து, நெற்றியில் பற்று போட்டு வந்தால் தலைவலி, தலைபாரம், சைனஸ் பிரச்னைகள் தீரும். ஒரு பிடி அருகம்புல்லை இடித்து சாறு எடுத்து, வெறும் வயிற்றில் குடித்தால் சளி, சைனஸ் ஆகியவை சரியாகும்.
அதி மதுரம், ஆடாதொடை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து, தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் தொண்டையில் ஏற்படும் அனைத்து நோய்களும் குணமாகும். திப்பிலி, சுக்கு, சித்தரத்தை அனைத்தையும் சம அளவில் எடுத்து, கஷாயம் வைத்துக் குடித்தால் காய்ச்சல், சளி, இருமல், நுரையீரல் நோய்கள் குணமாகும்.
அகத்திக் கீரை சாறு மற்றும் அகத்திப் பூ சாறு இரண்டிலும் தேன் கலந்து குடித்தால் தொடர் தும்மல் நிற்கும்.