வியாழன், 1 செப்டம்பர், 2011

பிள்ளையார்சுழி போடு, செயல் தொடங்கு!

பிள்ளையார்சுழி போடு, செயல் தொடங்கு!

விநாயகர் சதுர்த்தியன்று விநாயகரைப் போற்றி வழிபடுவ தற்கு வசதியாக ஆதிசங்கரர் பாடிய கணேச பஞ்சரத்தினத் தின் பொருளைத் தொகுத்து வழ ங்கியுள்ளோம். இதை விநாயகரி ன்முன் பக்தியோடு சொல்லி வழி படுவோருக்கு தொடங்கும் செய ல்கள் யாவும் இனிதே நிறை வேறும்.
* தனக்கு மேல் வேறு ஒரு தலை வன் இல்லை என்ற ஒப்பற்ற தனி ப்பெருந்தலைவனே! கஜமுகாசுர னை அழித்து தேவர் களைக் காத்தவனே! அற்புதம் நிகழ்த்துப வனே! மோதகம் ஏந்தியவனே! சந்திரனைத் தலையில் சூடியவ னே! உயிர் களை முக்தி நெறியில் செலுத்துபவனே! உன் னை நம்பும் அடியவர்களின் தீவினைகளைப் போக்கி கரு ணை காட்டும் கணபதியே! உம்மை வணங்குகிறேன்.
* தேவாதிதேவனே! பாமரர்களின் அறியாமையைப் போக்கு பவனே! வல்லமை நிறைந்தவனே! ஆனை முகனே! கருணை மிக்க இதயம் கொண்டவனே! அப்பாலுக்கும் அப் பாலாய் வீற்றிருக்கும் பரம் பொரு ளே! எப்போதும் உன் திருவடியை சரணடைந்து வழிபடும் பாக்கிய த்தை அருள்வாயாக.
* ஓங்கார வடிவினனே! கருணா மூர்த்தியே! பொறுமை, மகி ழ்ச்சி, புகழ் மிக்கவனே! எல்லா உயிர்க ளும் மகிழும்படி நன்மை அருள் பவனே! பணியும் அன்பர்களின் பிழை பொறுப் பவனே! அடி யார் வேண்டும் வரம் தந்தருள்பவனே! நித்ய வடிவினே! உன்னை வணங்குகிறேன்.
* கன்னத்தில் மதநீர் பொழியும் கஜமுகப் பெருமானே! சிரிப் பாலே திரிபுர சம்ஹார ம் செய்த சிவபெருமா னின் புதல்வனே! பக்த ர்களின் துயர் களை பவனே! ஊழிக் காலத் தில் உலகத்தைக் காத் தருள்பவனே! செய்யும் செயல்களின் வெற் றிக்குத் துணைநிற்கும் ஆதி பரம் பொருளே! உன்னை சரண டைந்து போற்றுகின்றேன்.
* ஒற்றைக் கொம்பனே! கணபதீஸ் வரா! சிவபெருமானின் பிள்ளை யே! ஆதி அந்தமில்லாதவனே! துன்பம் துடைப்பவ னே! யோகியர் உள்ளத்தில் குடிகொண்டவனே! உன் திருவடி களை எப்போதும் திருவடியில் வைத்து சிரம் தாழ்த் தி வண ங்கும் இச்சிறியேனையும் காத்தருள்வாயாக.
விநாயகப்பெருமானின் இத்துதி யை அதிகாலையில் பாராய ணம் செய்வோருக்கு நோய்நொடிகள் அனைத்தும் விலகும். தோஷம் யாவும் நீங்கும். வாழ்வில் உண்டாகும் துன்பம், தொல்லை யாவும் அடியோடு அகலும். குலம் தழைக்க மழ லைச் செல்வம் கிடைக்கும். நற்புகழும், மேம்பாடும் உண் டாகும். அஷ்டமாசித்திகள் கைகூடும். எனவே, அந்த விக்ன விநா யகப்பெருமானை வழிபடுவோமாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக