வியாழன், 18 ஜூன், 2015

சுக்கில சுரப்பி நோய்

Posted By Muthukumar,On June 18,2015

சிறுநீரகங்கள், சிறுநீர் குழாய்கள், சிறுநீர்ப் பை, ஆண் குறி, சிறுநீர் வடிகுழாய் ஆகிய உறுப்புகள் உடலில் தேவையற்ற பொருட்களை வெளியேற்றுவதற்கு உதவுகின்றது.
சிறுநீர்ப்பை அலர்ஜி, சிறுநீர் வடிகுழாய் தொற்று, சிறுநீரகங்களில் தொற்று போன்றவை பொதுவாக பெண்கள் மத்தியிலேயே அதிகமாக காணப்படுகின்றன. இருப்பினும் ஆண்களுக்கும் இத் தொற்று ஏற்படலாம். இது சில சமயம் சுக்கில சுரப்பியின் (Prostate gland) கடுமையான நோய்கள் சிலவற்றுக்கான அறிகுறிகளாகவும் தோன்றலாம்.
ஆண்களில் காணப்படும் Urethritis பொதுவாக பாலியல் உறவின் மூலமாகவே ஏற்படுகின்றது. பெரும்பான்மையான தொற்றுக்கள் சிறுநீரகங்கள், சிறுநீரகப்பை, சிறுநீர் குழாய்கள் போன்றவற்றையே அதிகமாக தாக்குகின்றன. இவற்றை சிறுநீர் தொற்று என கூறப்படுகின்றது.
Escherichia வாலையே 85% மான சிறுநீர் பாதைத் தொற்று ஏற்படுகின்றது. Chlamydia யாவும் சிலசமயம் சிருநீர்ப் பை பிரச்சனைகளுக்கு காரணமாக அமையலாம்.
Cystitis, Pyelonephritis, Urethritis போன்ற தொற்றுக்கள் ஆண்களை விட பெண்களுக்கே அதிகமாக வரக்கூடிய சாத்தியமுண்டு. ஏனென்றல் மலவாசல், கருப்பைவாய்க் குழாய், சிறுநீர் வடிகுழாய் என்பன நெருக்கமாக இருப்பதுடன், பெண்களின் சிறுநீர்வடிகுழாய் சிறியதாகவும் காணப்படுவதால் மலவாய், கருப்பை வாய், சிருநீர்வடி குழாய்க்கு மிக இலகுவாக பாக்டீரியா தொற்றி விடுகிறது.
ஆகவே, இரு பாலரும் சிறுநீர் குழாய் பராமரிப்பில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, கோடை காலங்களில் மிகவும் கவனம். சிறுநீரை அடக்கும் பெண்கள் அதை தவிர்ப்பது நல்லது. அடிக்கடி தண்ணீர் குடிப்பது, சிறுநீரை அடக்காமல் வெளியேற்றுவது, பழச்சாறுகள், இளநீர் ஆகிய பானங்களை பருகுவது ஆகியவற்றை முறையாக பின்பற்றினால் சிறுநீர் குழாய் சிக்கல்களில் இருந்து எளிதில் தப்பலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக