Posted By MUthukumar,On Feb 11,2015

உணவில் அதிக உப்பு சேர்த்துக்கொண்டால், இருதய கோளாறு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும் என்றுதான் , இதுவரை டாக்டர்கள் கூறி வந்தனர். இப்போதோ, உப்பைக் குறைத்துக்கொண்டால், மாரடைப்பு ஏறப்டும் என்று ஆய்வாளர்கள் கூறி அலற வைக்கின்றனர்.
உப்பின் சுவை இல்லாமல் எந்த உணவும் சுவைக்காது. உப்பின் அளவு அதிகரித்தால், எந்த உணவையும் சாப்பிட முடியாது. உணவில் உப்பின் அளவு அதிகரிப்பது உயிருக்கு ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள். உணவுப் பொருட்களில் உப்பு அதிகம் சேர்த்தால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் என்பது மருத்துவர்கள் கருத்தாகும்.
உப்பைக் குறைத்தாலும் இதய நோய் வரும் என்று சமீபத்திய ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. திடீரென மாரடைப்பு வருவதற்கு உயர் ரத்த அழுத்தமும், கொழுப்பு பொருட்களை சேர்ப்பதும்தான் காரணம் என்கின்றனர், ஆய்வாளர்கள். எனவேதான் ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு உணவில் உப்பின் அளவைக் குறைக்க , மருத்துவர்கள் ஆலோசனை தெரிவிக்கின்ற்னர். இது குறித்து டென்மார்க்கில் உள்ள கோபன் ஹேகன் பல்கலைக் கழக மருத்துவமனையில் 40,000 பெரிடம் ஆய்வு மேற்கொள்ளப்படட்து. 67 ஆய்வுகளின் முடிவில், உப்பைக் குறைத்துக்கொள்வோரின் உடலில் 2.5 சதவிகிதம் கொழுப்பு அதிகரிப்பதாக அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது
இவ்வாறு தொடர்ந்து உப்பைக் குறைத்து வந்தவர்களின் சிறுநீரகத்தில், ரெனின் என்ற புரதமும் , அல்டோஸ்டின் என்ற ஹர்மோனும் அதிகளவில் சுரந்து, உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
உப்பைக் குறைத்தால், இதய நோயை ஏற்படுத்தும். புகை பிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும். .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக