Posted on August 12, 2012 by muthukumar
சர்க்கரைக்கு பயந்து செயற்கை சர்க்கரையை சாப்பிடுபவர்கள் காசு கொடுத்து சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்கின்றனர் எ
ன்று
 எச்சரிக்கின்றனர் உணவியல் நிபு ணர்கள். ஏனெனில் செயற்கை சர்க்க ரையில் 
உள்ள ரசாயனங்களினால் புற் றுநோய், சிறுநீரகக் கோளாறு போன்ற பக்கவிளைவுகள் 
ஏற்படும் அபாயம் என் று அதிர்ச்சியளித்து ள்ளனர்.
நாம்
 அன்றாடம் உண்ணும் உணவு களில் உடலுக்குத் தேவையான சர்க்க ரை 
கிடைத்துவிடுகிறது. சாதம், கோது மை உணவுகள், உருளைக் கிழங்கு, பால், கா 
ய்கறிகள், பழங்கள் என எல்லாவற்றிலும் சர்க்கரை இருக்கும்போ து, தனியாக 
சர்க்கரையை சேர்க்க வேண்டியதில்லை என்பது மருத் துவர்களின் அறிவுரை. தனியாக சேர்க்கப்படும் சர்க்கரையில் 
எந்த
 வித சத்துக்களும் இல்லை மாறாக கலோரிகள் அதிகரிக்கின்றன என வே ஆரோக்கியமான 
நபருக்கு ஒரு நாளைக்கு 2 டீஸ்பூன் சர்க்கரைக்கு மேல் தேவையில்லை என்று 
நிபுண ர்கள் கூறியுள்ளனர். கடின உழைப் பாளிகள், குழந்தைகள் மட்டும் 
நாளொன்றுக்கு3 முதல்5 டீஸ்பூன் சர்க்கரையை சேர்த்துக் கொள்ளலா மாம்.
சர்க்கரையானது
 சுக்ரோஸ்( வீட்டில் உபயோகப்படுத்துவது) லாக் டோஸ் ( பாலில் உள்ளது) 
ப்ரக்டோஸ் ( பழங்களில் உள்ளது) மால் டோஸ் மற்றும் குளுக்கோஸ் என பல வகையாக 
பிரிக்கப்பட்டுள்ளது. நாம் சாப்பிடுவதற்குப் பயன் படுத்தப்படும் சர்க்கரை 
கரும்புச்சாறில் இருந்து தயாரிக்கப் படுகிறது. பழுப்பு நிற சர்க்கரையை 
பயன்படுத்துவத னால் உடலுக்கு தீங்கில்லை. அதேசமயம் ரசாயனம் சேர்த்து வெண் 
மையாக்கப்பட்ட
 சர்க்கரை உடலுக்கு தீங்கு தரக்கூடியது. இதனை அதிகம் சேர்த்துக்கொண்டால் 
உடலில் கலோரி கள் அதிகரித்து உடல் பருமன், பற்களில் பாதிப்பு, நீரிழிவு 
போன் றவை ஏற்படுகி ன்றன.
இதனை
 தவிர்க்கவும், கலோரிகளை கட்டுப்படுத்தவும் செயற்கை சர்க்கரை அறிமுகம் 
செய்யப்பட்டது. செயற்கை சர்க்கரையை பொறுத்த வரை, சாதார ண சர்க்கரையில் உள்ள
 இனிப்பைவிட 200 மடங்கு இனிப்பு அதிகம். அதற்கு இந்த அஸ்பார்டேம் என்ற 
ரசாயன கலவை தான் காரணம். சாதாரண சர்க்கரையில் ஒரு கிராமில் நான்கு கலோரி 
உள்ளது. ஆனால், செயற்கை சுவீட்னரில் அந்த அளவுக்கு கலோரியே இல் லை என்பது 
குறிப்பிடத்தக்கது.
இந்தியாவை பொறுத்தவரை ஒரு கோடிப்பேர், செயற்கை இனிப் 
பூட்டிகள்
 பயன்படுத்துகின்றனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இத்தாலியைச் சேர்ந்த 
ஐரோப்பிய மலாஸ்ஸினி பவுண்டேஷன் என்ற மருத்துவ ஆராய்ச்சி அமை ப்பு 
சிறுநீரகத்தில் புற்று நோய் ஏற் படுவதற்கு இந்த அஸ்பார்ட்டேம் காரணமாக 
இருக்கலாம் என்று கூறுகிறது. இது எந்த அளவு உண் மை என்பது உறுதி செய்யப்படா
 விட்டாலும், செயற்கை சுவீட்னர் அளவுக்கு மிஞ்சினால் ஆபத்துதான் என்று 
உறுதி செய்யப்பட்டுள்ள து.
ஒரு சிலர் இனிப்புச் சுவைக்கு சர்க்கரைக்கு பதில் செயற்கை சர்க் கரை பயன்படுத்தினால் கலோரி அதிகரிக்காது என்கிறார்கள். சர்க் 
கரையைத்
 தவிர்த்து, செயற் கை இனிப்பு சேர்த்தால் எடை கூடாது என்கிற தவறான 
எண்ணத்தில், பலரும் ஒரு நா ளைக்கு அதைச் சேர்த்து ஏக ப்பட்ட காபி, டீ, 
குளிர்பானங் களை அருந்துகிறார்கள் இது தவறான செயல். ஏனெனில் செயற்கை 
சர்க்கரை என்பது நீரிழிவுக் காரர்களுக்கானது. மற்றவர்களுக்கு அது தேவையே 
இல்லை.
இயற்கை சர்க்கரை வகையைச் சார்ந்த சுக்ரலோஸை கர்ப்பிணி கள், குழந்தைகள் எடுத்துக்கொள்ளலாம். அதேசமயம் சாக்ரின், 
ஆஸ்பர்டேம்
 என செயற்கை சர் க்கரை வகையறாக்கள் எல்லா மே ரசாயனக்கலப்புள்ளது. நீரி ழிவு
 உள்ளவர்களாக இருந்தா லுமே, 12 வயதுக்குட்பட்ட குழந் தைகள், கர்ப்பிணிப் 
பெண்கள், தாய்ப் பாலூட்டும் பெண்கள் இந் த செயற்கை சர்க்கரையை எடு த்துக் 
கொள்ளக் கூடாது.
மற்றவர்களும்
 ஒரு நாளைக்கு 2 அல்லது3 செயற்கை சர்க்கரை மாத்திரைக்கு மேல் எடுத்துக்கொ 
ள்ள வேண்டாம் என்று நிபுணர் கள் அறிவுறுத்தியுள்ளனர். ஏனெனில் செயற்கை 
சர்க்கரையை அதிகமாக உபயோகிப்பதனால் ஒற்றைத் 
தலைவலி,
 மனஅழுத்தம், குழப்ப ம், கண்பார்வை குறைபாடு, புற்று நோய் போன்றவை ஏற்படும்
 என்று எச்சரிக்கின்றனர். மேலும் செயற் கை சர்க்கரையினால் சுவாசக் கோளாறு, 
தோல் அரிப்பு போன்ற வைகளும் ஏற்படுமாம்.
சர்க்கரைக்குப்
 பதில் சுத்தமான தேன், கருப்பட்டி அல்லது பனை வெல்லம் சேர்த்துக்கொள்ளலாம்.
 அதுவும் கூட அளவுக்கதிகமாக எடுத்துக் கொள்வதும் சரியல்ல. மேலும் 
நீரிழிவுநோயினால் பாதிக் கப்பட்டவர்கள் தேன், கருப்பட்டி, பனைவெல்லம் 
சேர்த்துக் கொள்வ து உகந்ததல்ல என்கின்றனர் நிபுணர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக