ஞாயிறு, 2 அக்டோபர், 2011

செக்ஸ் எக்சைஸஸ்


Post image for செக்ஸ் எக்சைஸஸ் மனிதர்களின் பாலியல் செயல்பாடுகள் சிக்கலானவை. உடலும் மனமும் இணைந்து செய்ய வேண்டிய செயல் ஆண் – பெண் உடலுறவு. உடலுறவு திருப்தியாக இருக்க எண்ணங்கள், உணர்ச்சிகள், ஹார்மோன்கள், சூழ்நிலை, பார்வை, ஸ்பரிசம், வாசனை போன்ற பலவற்றின் சரியான செய்கைகளே பாலுணர்வை தூண்டி பாலியல் உறவுக்கு உதவுகின்றன.
ஆண்களில் பாலுறவின் போது நரம்புகளின் செயல்பாடு மிகவும் முக்கியமானது. பாலுறவின் போது நுகர்தல் (வாசனையை உணரும் திறன்) மற்றும் உணர்தல் (தொடுவதை உணரும் திறன்) ஆகிய இரண்டும் தான் பாலுறவின் செயல்பாட்டிற்கு தூண்டுதலாக அமைகின்றன இதனை சிறப்பாகச் செய்பவை சிறிய நுண்ணிய நரம்புகள் தான் பெண்கள் மாதவிலக்கின் போது பாலுறவில் அதிக நாட்டம் கொள்வதும் இந்த நுகரும் திறன் அதிகரிப்பது தான் காரணம் என ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளன.
பார்வை நரம்புகளும் பெரிய அளவில் பாலுணர்ச்சியை தூண்டக் கூடியவை பார்வை நரம்புகளின் செயல்பாட்டால் தான் எதிர் பாலினரைக் கண்டவுடன் பாலுணர்வு அதிகமாகின்றது. இரவு தூங்கும் பொழுதும் கனவில் பாலுறவு கொள்வது போல கனவு வருவதும் இந்த பார்வை நரம்புகளின் செயல்பாட்டால் தான்.
தொடு உணர்வு தான் ஆணுறுப்பிற்கு விரைப்பைத் தருகிறது ஆணுறுப்பின் முன் புறமுள்ள டார்சஸ் நரம்புகள் அதிக தொடு உணர்வு கொண்டவை எனவே தான் ஆணுறுப்பைப் பிறர் தொட்டவுடன் விரைப்பு ஏற்படுகின்றது.
அனைத்து ஆண்மைக்குறைவும் உடல்ரீதியானது மட்டுமல்ல மனரீதியானதும் கூட. பெரும்பாலானவை இரண்டின் கலவையே ஆகும். உடல்ரீதியாகக் தோன்றக் கூடியவை மனரீதியானவையாகவும் மாறலாம். இவை பயம், மனஅழற்சி, அழுத்தம் ஆகியவற்றையும் குறிக்கும். இவை சிறிய பிரச்சனையைக் கூட பூதாகரமாக மாற்றிடக்கூடும்.
பெரும்பாலான ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு என்பது கீழ்க்கண்ட வகைகளாக ஏற்படுகிறது.
1. விருப்பமின்மை – பாலியல் உணர்வை தூண்டும் எல்லா செயல்களாலும் உறவு கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்க முடியாமல் போதல்.
2. செயல் திறன் குறைபாடு, இயலாமை, குறைந்த வீர்யம் – குறைவான வேகமும், செயல் திறனும் கொண்டவர்கள் நாளடைவில் உடலுறவைப் பற்றி சிந்திப்பதையே குறைத்துக் கொள்கின்றனர்.
3. விரைப்பின்மை – இது ஆணின் இனப்பெருக்க உறுப்பு பெண்ணுடன் உடலுறவு கொள்ள ஏதுவாக பெரிதாக ஆக முடியாமல் விரைப்பில்லாமல் இருப்பதையே குறிக்கும். விரைப்பு ஏற்பட கலவியின் போது ஆணுறுப்புக்கு அதிக ரத்தம் பாய வேண்டும்.
4. விந்து முந்துதல் – ஆணின் உறுப்பு பெண்ணின் உறுப்பினுள் நுழைந்த உடனேயே விந்து வெளியேறிவிடுவதாகும்.
5. விந்து வெளிப்படாமை – இந்த நிலையில் விந்து ஆணுறுப்பு வழியே வெளியேறாமல், பின்னோக்கி சிறுநீர்ப்பையில் விழுதல்
உடல் மற்றும் மனோரீதியான காரணங்கள்
1. ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரோன் குறைபாடு
2. இரத்த நாளங்கள், நரம்புகளின் குறைபாடுகுள், பாதிப்புகள்
3. சத்துணவு குறைபாடு
4. நீரிழிவு, நரம்பு மண்டல நோய்கள்
5. படபடப்பு, பேராவல், மனவிசாரம், துணைவியை திருப்திப்படுத்த முடியாதோ என்ற பயம், (கிஸீஜ்வீமீtஹ்), மனச்சோர்வு (ஞிமீஜீக்ஷீமீssவீஷீஸீ).
6. அறியாமை, பாலியல் பற்றிய தவறான கருத்துகள்
7. பிடிக்காத மனைவி, ஒத்துழைக்க மறுக்கும் மனைவி
8. பால்ய பருவத்தில் ஏற்படும் மனபாதிப்புகள்
9. பயம், தன்னம்பிக்கை இல்லாதது.
பெண்களின் குறைபாடுகள்
1. உடலுறவின் போது வலி (ஞிஹ்sஜீணீக்ஷீமீuஸீவீணீ)
2. பிறப்புறுப்பு தானாகவே சுருங்குவதால் உடலுறவு முடியாமல் போதல். அடிப்படை பயத்தால், பெண்ணின் பிறப்புறுப்பு “மூடியது” போல் சுருங்கி விடும்.
3. பிறப்புறுப்பில் எரிச்சல், அரிப்பு, வலி உண்டாதல்
4. உடலுறவில் நாட்டம் இல்லாமல் போதல்.
பெண் குறைபாடுகளுக்கு மனோ ரீதியான காரணங்கள்
1. அறியாமை, உடலுறவு என்றாலே ஒரு ‘கெட்ட’ விஷயம் என்ற கருத்து மனதில் ஆழமாக பதிந்திருத்தல்
2. பரபரப்பு, மனச்சோர்வு
3. கணவரை பிடிக்காமல் போதல், சண்டை, சச்சரவு
4. குழந்தை உண்டாகி விடுமோ என்ற பயம்
5. யௌவன பருவத்தில் நடந்த சில அசம்பாவிதங்கள். உறவினர்கள் / தெரியாதவர்கள். உறவினர்களால் தெரியாதவர்களால் கற்பழிக்கப்படுவது.
ஆயுர்வேத சிகிச்சை மருந்துகள்
ஆயுர்வேத சிகிச்சைகள், பொதுவாக பாலியல் கோளாறுகளுக்கும், குறிப்பாக மனக்கோளாறுகளுக்கும் முழுமையான பயனை அளிக்கும். பஞ்சகர்மா, ரசாயனம், வாஜீகர்ணம் முதலிய சிகிச்சைகள் அளிக்கப்படும். பிறகு திரிதோஷக் கோளாறுகள் சீராக்கப்படும். இதில் சத்துணவு, யோகா, மூலிகைகள், வாழ்க்கை முறை மாற்றங்கள் அடங்கும். இவ்வாறு வியாதியின் அடிப்படை காரணம் களையப்படும். சதவாரி, சங்கு புஷ்பம், அஸ்வகந்தா, குடூச்சி, ஜடமான்சி போன்ற மூலிகைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆயுர்வேத வைத்தியரை அணுகி, பயனடையவும்.
யோகாவும் செக்ஸ் குறைபாடுகளும்
பலருக்கு யோகாவும் யோகாசனங்களும் ஆன்மீக தேவை உள்ள சந்நியாசிகள் போன்றவர்களுக்கே ஏற்றவை என்ற அபிப்பிராயம் உள்ளது. யோகா பாலயலங உணர்வுகளையும் செயல்திறனையும் எந்த விதத்திலும் பாதிக்கிறது. மாறாக உடல் குறைபாடுகளையும், மனதின் எதிர்மறை எண்ணங்களையும் போக்கி, பாலியல் உறவை முழுமையாக அனுபவிக்க உதவும். யோகா ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் போதிப்பதால், சுறுசுறுப்பு ஏற்பட்டு சோம்பேறித்தனம் அகலும். நரம்புகள் வலிவடையும். டென்ஷன், ஸ்ட்ரெஸ் குறையும். செக்ஸ் சுரப்பிகள் ஊக்குவிக்கப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக