வெள்ளி, 26 செப்டம்பர், 2014

குழந்தைக்கு ஒவ்வொரு வயதிலும் ஏற்படும் முதிர்ச்சிப் படிகள்!


தாய்மார்களே! கர்ப்பிணிகளே! கவனிக்க – உங்க குழந்தை, ஒவ் வொரு வயதிலும் ஏற்படும் முதிர்ச்சிப் படிகள்! (நிலைகள்) கடக் கும்!

ஒரு குழந்தை, எப்போது நடக்கும் , தவழும் , பேசும் , போன்ற எதிர் பார்ப்பு குழந்தை பிறக்கும் போதே பெற்றோருக்கும் பிறது விடும்.
உண்மையில் ஒரு குழந்தையின் வளர்ச்சியானது ஒரு படிமுறையாக கட்டமைக்கப் பட்டதாகும். குறிப்பிட்ட
காலத்தில்தான் ( வயதில்) குறிப்பிட்ட செய்முறைகளை செய்வதற்குரிய ஆற்றல் அந்தக் குழந்தைக்கு உருவாகும்.
இவ்வாறு ஒவ்வொரு வயதிலும் ஒரு குழந்தை அடைய வேண்டிய ஆற்றல் அந்த வய திற்குரிய வளர்ச்சி எல்லை (mile stone ) எனப்படுகிறது.
அதாவது ஒரு எட்டு மாதக் குழந்தையின் வளர்ச்சி எல்லையானது(mile stone) தவழப் தொடங்குதல் .
இவ்வாறு மனிதனின் வளர்ச்சி எல்லை நான்கு முக்கிய பிரிவுகளில் நடைபெறு கிறது.
அசைவு சம்பந்தமான வளர்ச்சி (தவழு தல், நடத்தல், ஊடுதல்)(GROSS MOTOR) சமூகத்தோடு ஐக்கியமாகும் வளர்ச்சி( சிரித்தல், கையசைத்தல், ) (SOCIAL)
நுணுக்கவேலைகள் மற்றும் பார்வை (FINE MOTOR)
பேச்சு மற்றும் செவிப்புல வளர்ச்சி (SPEECH AND HEARING )
இந்த இடுகையில் முதலாவது பிரிவில் ஏற்படுகின்ற வளர்ச்சிப்படிமுறைகளை பார்ப்போம்.
தலைய நேராக வைத்திருத்தல் (head control ) —– 4 மாதம்
குழந்தை உடம்பை சுழற்றுதல்(குப்புறப் படுத்தல்) —- 3 – 6 மாதம்
துணையாக நாம் பிடித்துக் கொள்ளும் போது இருத்தல் —–5 மாதம்
எந்தத் துணையும் இல்லாமல் இருத்தல் ——- 6மாதம்
தவழுதல் ——– 8மாதம்
எழுந்து நிற்றல் ——– 9மாதம்
பிடித்துக்கொண்டு நடத்தல் —-10 மாதம்
துணையின்றி நடத்தல் —–12 மாதம்
ஓடுதல் ——– 15மாதம்
ஒரு பந்தை உதைத்தல் ——–24மாதம்
மூன்று சக்கரங்களைக்கொண்ட வண்டியை மிதித்தல் —–36மாதம
மூன்று மாதம் வயதுடைய குழந்தை செய்ய வேண்டியவை..
அசைவு சம்பந்தமான செயற்பாடுகள்
தலையை நிமிர்த்தி வைத்திருக்கும் திறன் .
குப்புறப்படுத்திருக்கும்போது தலை மற்றும் நெஞ்சினை உயர்த்துதல
அசையும் பொருள் அல்லது நபர்க ளை தொடர்ச்சியாக பார்த்தல்
உணர்ச்சி மற்றும் சிந்தனை சம்ப ந்தமானவை
ஒலி வரும் திசையை நோக்கி தலையைத் திருப்புதல்
நீங்கள் ஒலி எழுப்பி விளையாட்டுக் காட்டுவதை உணர்ந்து ரசித்த ல்
நீங்கள் சிரிக்கும் போது பதிலுக்குச் சிரித்தல்
ஆறு மாதக் குழந்தையின் திறன்கள்
அசைவு சம்பந்தமானவை
இருத்தி வைக்கும் போது தலையை நேராக வைத்திருத்தல்
தூரத்தில் இருக்கும் விளையாட்டுப் பொருட் களை எட்டிப் பிடித்தல்
சூப்பிப் போத்தலைப் பிடித்து பால் குடிக்க முயற்சித்தல்
விளையாட்டுப் பொருட்களை ஒரு கையில் இருந்து இன்னொருகைக்கு மாற்றுதல்
தானாக எழுந்து இருத்தல் உடம்பை உருட்டிக் கொண்டே அசைதல்
உணர்ச்சி மற்றும் எண்ணம் சம்பந்த மானவை
சாப்படைக் கொடுக்க, போகும் போது வாயைத் திறத்தல்
மற்றவர்கள் செய்யும் சிறிய செயல்களை திருப்பிச் செய்ய முயற்சித் தல்
பேச்சு
நெருக்கமானவர்களின் முகங்க ளை அறிந்து கொள்ளுதல்
தொந்ததரவுக்கு உள்ளாகும்போது அழுதல்
கண்ணாடியில் தன் முகத்தையே பார்த்து சிரித்தல்
ஒரு வயதுடைய குழந்தையின் திறன்கள்
அசைவு சம்பந்தப்பட்டது
சூப்பியில் இருந்து கோப்பையினால் குடிக்கப் பழகுதல்
சிறிய உணவுத்துண்டுகளை தானாக வே எடுத்து வாயில் வைத்துச் சாப்பிடு தல்
துணையின்றி சில அடிகள் நடத்தல்
உணர்ச்சி சம்பந்த பட்டவை
மற்றவர்கள் செய்யும் செயற்பாடுகளை தானும் செய்ய முயற்சித்தல்
இசையை கேட்டு சிறிய உடல் அசைவு களைக் காண்பித்தல்
தூரத்தில் உள்ள விளையாட்டுப் பொரு ட்களை தேடித் போய் விளையாட முயற்சித்தல்
பேச்சு
அம்மா அப்பா தவிர்ந்த வேறு ஒரு வார்த்தையை பேசத் தொடங்கு தல்
வீட்டில் உள்ள மற்றவர்களின் பெயர்க ளை அறிந்து கொள் ளுதல் மற்றவர்க ளோடு பேச முய ற்சித்தல்
வீட்டில் உள்ளவர்களோடு நெருக்கமாகப் பழகி வெளியாட்களோடு அன்னியத்தைக் காண்பித்தல்
பெரியவர்கள் சொல்லும் சிறிய சிறிய கட்டளைக ளை உணர்ந்து கொள்ளுதல்

பானை போன்று வயிறு வர ஆரம்பிக்கிறதா?

Posted By Muthukumar ,On September 2014

இன்றைய காலத்தில் வீட்டில் சமைத்து சாப்பிடுவோரின் எண்ணிக்கை குறைவு. மாறாக கடைகளில் பார்த்ததும் சாப்பிடும் வண்ணம் சுவையாக இருக்கும் உணவுப் பொருட்களான பிட்சா, பர்கர், சாண்ட்விச் போன்றவற்றை உட்கொண்டு வருவதோடு, எண்ணெயில் பொரித்த அசைவ உணவுகளை அதிகம் உட்கொண்டு வருகின்றனர். இதனால் அவர்களின் உடலில் கலோரிகள் மற்றும் கொழுப்புக்களானது அதிகரித்து, உடல் பருமன் அதிகரித்து தொப்பை வர ஆரம்பிக்கிறது. பத்தே நாட்களில் எடையை குறைக்க வேண்டுமா? அப்ப வாட்டர் டயட் ஃபாலோ பண்ணுங்க… இப்படியே தொடர்ந்தால், எழுந்து நடக்க முடியாத அளவில் போவதோடு, பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். குறிப்பாக இதய நோய், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் விரைவில்
வரக்கூடும். ஆகவே உடல் பருமன் அதிகம் இருந்தால், முடிந்த அளவில் கடைகளில் வாங்கி சாப்பிடுவதை தவிர்த்து, வீட்டிலேயே கலோரி குறைவாக இருக்கும் உணவுப் பொருட்களை வாங்கி சமைத்து சாப்பிடுங்கள். ஏழே நாட்களில் ஏழு கிலோ குறைய வேண்டுமா? இதோ அட்டகாசமான சில டயட் டிப்ஸ்… குறிப்பாக அன்றாடம் உடற்பயிற்சி செய்து, உண்ணும் உணவில் கலோரிகள் குறைவான உணவுகளை சேர்த்து வந்தால், உடல் பருமன் குறையும். இங்கு கலோரி குறைவாக இருக்கும் சில உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து பிடித்ததை சமைத்து சாப்பிட்டு வாருங்கள். காளானில் வைட்டமின் டி மற்றும் செலினியம் அதிகம் நிறைந்திருப்பதால், இவற்றை உட்கொண்டால் மன அழுத்தம் குறைந்து, நல்ல தூக்கத்தைப் பெறலாம். மேலும் இதில் கலோரிகளும் குறைவாக இருப்பதால், இவற்றை உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது. வெள்ளரிக்காயில் கலோரிகள் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் நிறைந்திருப்பதால், இவற்றை அவ்வப்போது உட்கொண்டு வந்தால், உடலுக்கு வேண்டிய இதர சத்துக்களான வைட்டமின் கே, பொட்டாசியம் போன்றவையும் கிடைக்கும். மேலும் உடல் எடையும் குறையும். அஸ்பாரகஸில் கலோரிகளே கிடையாது. மேலும் இது மிகவும் சுவையானதும், ஆரோக்கியமானதும் கூட. அதுமட்டுமின்றி, அஸ்பாரகஸில் உடலுக்கு வேண்டிய வைட்டமின் ஏ மற்றும் ஃபோலேட் அதிகம் நிறைந்துள்ளது. தர்பூசணியிலும் நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு தர்பூசணி மிகவும் சிறப்பான உணவுப் பொருள். ஆகவே இதனை தினமும் ஸ்நாக்ஸ் நேரத்தில் உட்கொண்டு வருவது நல்ல பலனைத் தரும். சாலட் செய்யும் போது, அதில் மறக்காமல் தக்காளியை சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் தக்காளியில் உள்ள லைகோபைன் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. அதிலும் இதில் நீர்ச்சத்து நிறைந்திருப்பதால், இவற்றை உட்கொண்டு வந்தால், விரைவில் வயிறு நிறைந்துவிடும். செலரியில் கலோரிகள் சுத்தமாக இல்லை. மேலும் இதில் வைட்டமின் கே போதிய அளவில் நிறைந்துள்ளது. அத்துடன் இதில் நீர்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால், இதுவும் அடிக்கடி பசி எடுப்பதை தடுத்து, உடல் பருமன் அதிகரிப்பதை தடுக்கும். இந்த சூப்பர் உணவுப் பொருளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதிலும் கலோரிகள் இல்லாததால், இதனை தினமும் உணவில் சிறிது சேர்த்து வருவது மிகவும் சிறந்தது. சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி மற்றும் ஃபோலிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. எனவே சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்றவற்றை சேர்த்து வந்தால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, கலோரிகள் இல்லாததால் உடல் எடையும் குறையும். குடைமிளகாயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின சி எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளது. ஆகவே இதனையும் உணவில் அதிக அளவில் சேர்த்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம். பரங்கிக்காயில் நீர்ச்சது அதிகம் இருப்பதுடன், வைட்டமின்களும், இதர சத்துக்களும் வளமாக நிறைந்துள்ளது. மேலும் இதில் கலோரிகளும் இல்லை. ஆகவே எடையை குறைக்க நினைப்போருக்கு இது மிகவும் சிறப்பான உணவுப் பொருள். பச்சை இலைக் காய்கறிகளான பசலைக்கீரை, கடுகு கீரை, கேல் போன்றவற்றில் வைட்டமின் கே மற்றும் நார்ச்சத்து அமிகம் நிறைந்துள்ளது. எனவே இவற்றை உணவில் சேர்த்து வந்தால், தொப்பை வருவதைத் தவிர்க்கலாம்.