ஞாயிறு, 2 டிசம்பர், 2012

பனிக்காலத்தில் பட்டுக்குட்டிகளை பத்திரமா பாத்துக்கங்க!

Posted On Dec 03,2012,By Muthukumar
Winters Here Time Now Child Care
மழைக்காலம் முடியும் முன்பே பனிக்காலம் தொடங்கிவிட்டது. அதிகாலையில் மூடுபனி சில்லிடச் செய்வதால் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சளி, மூக்கில் வடிதல், இருமல் போன்றவை அதிகம் தாக்கும். தவிர தொண்டையில் டான்சில் வீக்கம், இருமல், ஆஸ்துமா போன்ற மூச்சுத்திணறல் நோய்கள் இந்த பனிக்காலத்தில்தான் அதிகரிக்கின்றன. அது மட்டுமல்லாது இன்புளுயன்ஸா காய்ச்சல், நிமோனியா, ஒற்றைத் தலைவலி, மூட்டுவலிகள், நரம்பு நோய்கள், தோல் நோய்கள் ஆகிய பல வியாதிகள் ஒவ்வொன்றாக வரிசை கட்டி நிற்கும்.
சிக்குன்குனியா, ஜப்பான் சுரம், மூளைக்காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்றவைகள் மாசு படிந்த காற்றில் உள்ள நோய் கிருமிகளால் இந்த பனிக்காலத்தில் அதிகம் தாக்குகின்றன. நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ள குழந்தைகளை இவை தாக்குவதால் அவர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே இவற்றில் தப்பிக்க வருமுன் காப்பதே நல்லது.
சத்தான உணவு
குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுத்தால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இதன் மூலம் எந்தவித நோயும் இரண்டு நாட்களுக்கு மேல் தங்காது.
காய்ச்சி ஆறவைத்த தண்ணீரையே குழந்தைகளுக்குக் குடிக்க கொடுக்கவேண்டும். அதிகம் இருமல் இருந்தால் வெதுவெதுப்பான சுடுநீரை குடிக்க கொடுக்கலாம்.
பனிக்காலத்தில் பெரியவர்களுக்கு மட்டுமல்லாது குழந்தைகளுக்கும் உடல் வறட்சி ஏற்படும். எனவே சருமம் வறண்டு போகாமல் இருக்க நிறைய பழங்கள், சத்தான காய்கறிகளை சாப்பிடக் கொடுக்கவேண்டும். இதன் மூலம் உடல் வறட்சி நீங்குவதோடு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
காரமான மசால உணவு வேண்டாம்
பனிக்காலத்தில் பலருக்கும் ஜீரண சக்தி குறைவாக இருப்பதால் வயிறு உபாதைகளும் ஏற்படும். எனவே அதிக காரமில்லாத மிதமான உணவுகளையே குழந்தைகளுக்குக் கொடுக்கவேண்டும். அப்பொழுதுதான் உணவு எளிதில் ஜீரணமாகும்.
மிகவும் குளிர்ச்சியாக இருக்கும் எதையும் சாப்பிடாதீர்கள். பனிக்காலத்தில் அதிகம் மசால் சேர்த்த உணவுகளைத் தவிர்த்து விடுங்கள். காரம், புளிப்பு இவற்றை குறைத்துக் கொள்ளுங்கள். குடிக்க, குளிக்க வெதுவெதுப்பான இளஞ்சூட்டில் உள்ள தண்ணீரைப் பயன்படுத்துங்கள். பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய் போன்ற நீர்க்காய்கறிகள் தவிர்த்துவிடுங்கள்.
தலை காது வழியே பனி விரைவில் உடலுக்குள் சென்று உபாதை தரும். எனவே வெளியே பனியில் செல்ல நேர்ந்தால் முக்கியமாய் குழந்தைகளுக்கு காதுகளை மூடும் குரங்குக்குல்லா போட வேண்டும். இதன்மூலம் குழந்தைகளுக்கு நோய் ஏற்படாமல் வருமுன் தடுக்கலாம்.
சளி நீக்கும் கற்பூரத்தைலம்
சளியினால் அதிகம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தைலம் தடவுவதை விட வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட கற்பூர எண்ணெயினை பூசி விடலாம். இதன் மூலம் சளித் தொந்தரவு நீங்கும். குழந்தையின் சருமமும் பாதிக்கப்படாது.
ஒரு குழிக்கரண்டி அல்லது கிண்ணத்தில் 15 சொட்டு தேங்காய் எண்ணெயை விட்டு சூடாக்கவும். தேங்காய் எண்ணெய் நன்கு சூடானதும் அதனை இறக்கிவிட்டு அதில் ஒரு சிறு கட்டி கற்பூரத்தைப் போடவும். உடனடியாக எண்ணெயில் கற்பூரம் கறைந்திருக்கும்.
நமது கைக்கு சூடு பொறுக்கும் அளவிற்கு உள்ள பதத்தில் தொட்டு குழந்தையின் நெஞ்சுப் பகுதி, கழுத்து, முதுகுப் பகுதிகளில் தேய்த்துவிடவும். அந்த சூட்டில் மார்பில் இருக்கும் சளி கரைந்து மூக்கு வழியாகவோ அல்லது மலம் வழியாகவோ வெளியேறிவிடும். குழந்தைக்கு இதனால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது.

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

செயற்கை சர்க்கரையினால் பக்கவிளைவுகள் ஏற்படும் அபாயம்

சர்க்கரைக்கு பயந்து செயற்கை சர்க்கரையை சாப்பிடுபவர்கள் காசு கொடுத்து சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்கின்றனர் என்று எச்சரிக்கின்றனர் உணவியல் நிபு ணர்கள். ஏனெனில் செயற்கை சர்க்க ரையில் உள்ள ரசாயனங்களினால் புற் றுநோய், சிறுநீரகக் கோளாறு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் அபாயம் என் று அதிர்ச்சியளித்து ள்ளனர்.
நாம் அன்றாடம் உண்ணும் உணவு களில் உடலுக்குத் தேவையான சர்க்க ரை கிடைத்துவிடுகிறது. சாதம், கோது மை உணவுகள், உருளைக் கிழங்கு, பால், கா ய்கறிகள், பழங்கள் என எல்லாவற்றிலும் சர்க்கரை இருக்கும்போ து, தனியாக சர்க்கரையை சேர்க்க வேண்டியதில்லை என்பது மருத் துவர்களின் அறிவுரை. தனியாக சேர்க்கப்படும் சர்க்கரையில் எந்த வித சத்துக்களும் இல்லை மாறாக கலோரிகள் அதிகரிக்கின்றன என வே ஆரோக்கியமான நபருக்கு ஒரு நாளைக்கு 2 டீஸ்பூன் சர்க்கரைக்கு மேல் தேவையில்லை என்று நிபுண ர்கள் கூறியுள்ளனர். கடின உழைப் பாளிகள், குழந்தைகள் மட்டும் நாளொன்றுக்கு3 முதல்5 டீஸ்பூன் சர்க்கரையை சேர்த்துக் கொள்ளலா மாம்.
சர்க்கரையானது சுக்ரோஸ்( வீட்டில் உபயோகப்படுத்துவது) லாக் டோஸ் ( பாலில் உள்ளது) ப்ரக்டோஸ் ( பழங்களில் உள்ளது) மால் டோஸ் மற்றும் குளுக்கோஸ் என பல வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. நாம் சாப்பிடுவதற்குப் பயன் படுத்தப்படும் சர்க்கரை கரும்புச்சாறில் இருந்து தயாரிக்கப் படுகிறது. பழுப்பு நிற சர்க்கரையை பயன்படுத்துவத னால் உடலுக்கு தீங்கில்லை. அதேசமயம் ரசாயனம் சேர்த்து வெண் மையாக்கப்பட்ட சர்க்கரை உடலுக்கு தீங்கு தரக்கூடியது. இதனை அதிகம் சேர்த்துக்கொண்டால் உடலில் கலோரி கள் அதிகரித்து உடல் பருமன், பற்களில் பாதிப்பு, நீரிழிவு போன் றவை ஏற்படுகி ன்றன.
இதனை தவிர்க்கவும், கலோரிகளை கட்டுப்படுத்தவும் செயற்கை சர்க்கரை அறிமுகம் செய்யப்பட்டது. செயற்கை சர்க்கரையை பொறுத்த வரை, சாதார ண சர்க்கரையில் உள்ள இனிப்பைவிட 200 மடங்கு இனிப்பு அதிகம். அதற்கு இந்த அஸ்பார்டேம் என்ற ரசாயன கலவை தான் காரணம். சாதாரண சர்க்கரையில் ஒரு கிராமில் நான்கு கலோரி உள்ளது. ஆனால், செயற்கை சுவீட்னரில் அந்த அளவுக்கு கலோரியே இல் லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவை பொறுத்தவரை ஒரு கோடிப்பேர், செயற்கை இனிப் பூட்டிகள் பயன்படுத்துகின்றனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இத்தாலியைச் சேர்ந்த ஐரோப்பிய மலாஸ்ஸினி பவுண்டேஷன் என்ற மருத்துவ ஆராய்ச்சி அமை ப்பு சிறுநீரகத்தில் புற்று நோய் ஏற் படுவதற்கு இந்த அஸ்பார்ட்டேம் காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறது. இது எந்த அளவு உண் மை என்பது உறுதி செய்யப்படா விட்டாலும், செயற்கை சுவீட்னர் அளவுக்கு மிஞ்சினால் ஆபத்துதான் என்று உறுதி செய்யப்பட்டுள்ள து.
ஒரு சிலர் இனிப்புச் சுவைக்கு சர்க்கரைக்கு பதில் செயற்கை சர்க் கரை பயன்படுத்தினால் கலோரி அதிகரிக்காது என்கிறார்கள். சர்க் கரையைத் தவிர்த்து, செயற் கை இனிப்பு சேர்த்தால் எடை கூடாது என்கிற தவறான எண்ணத்தில், பலரும் ஒரு நா ளைக்கு அதைச் சேர்த்து ஏக ப்பட்ட காபி, டீ, குளிர்பானங் களை அருந்துகிறார்கள் இது தவறான செயல். ஏனெனில் செயற்கை சர்க்கரை என்பது நீரிழிவுக் காரர்களுக்கானது. மற்றவர்களுக்கு அது தேவையே இல்லை.
இயற்கை சர்க்கரை வகையைச் சார்ந்த சுக்ரலோஸை கர்ப்பிணி கள், குழந்தைகள் எடுத்துக்கொள்ளலாம். அதேசமயம் சாக்ரின், ஆஸ்பர்டேம் என செயற்கை சர் க்கரை வகையறாக்கள் எல்லா மே ரசாயனக்கலப்புள்ளது. நீரி ழிவு உள்ளவர்களாக இருந்தா லுமே, 12 வயதுக்குட்பட்ட குழந் தைகள், கர்ப்பிணிப் பெண்கள், தாய்ப் பாலூட்டும் பெண்கள் இந் த செயற்கை சர்க்கரையை எடு த்துக் கொள்ளக் கூடாது.
மற்றவர்களும் ஒரு நாளைக்கு 2 அல்லது3 செயற்கை சர்க்கரை மாத்திரைக்கு மேல் எடுத்துக்கொ ள்ள வேண்டாம் என்று நிபுணர் கள் அறிவுறுத்தியுள்ளனர். ஏனெனில் செயற்கை சர்க்கரையை அதிகமாக உபயோகிப்பதனால் ஒற்றைத் தலைவலி, மனஅழுத்தம், குழப்ப ம், கண்பார்வை குறைபாடு, புற்று நோய் போன்றவை ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர். மேலும் செயற் கை சர்க்கரையினால் சுவாசக் கோளாறு, தோல் அரிப்பு போன்ற வைகளும் ஏற்படுமாம்.
சர்க்கரைக்குப் பதில் சுத்தமான தேன், கருப்பட்டி அல்லது பனை வெல்லம் சேர்த்துக்கொள்ளலாம். அதுவும் கூட அளவுக்கதிகமாக எடுத்துக் கொள்வதும் சரியல்ல. மேலும் நீரிழிவுநோயினால் பாதிக் கப்பட்டவர்கள் தேன், கருப்பட்டி, பனைவெல்லம் சேர்த்துக் கொள்வ து உகந்ததல்ல என்கின்றனர் நிபுணர்கள்.