வியாழன், 18 ஜூன், 2015

கர்ப்ப கால நம்பிக்கைகள்


ர்ப்ப காலத்தில், வயிறு பெரிதாக இருந்தால் பெண் குழந்தை, தொடர்ந்து வாந்தி வந்தால், குழந்தைக்குத் தலை முடி அதிகமாக இருக்கும் என்று பல்வேறு நம்பிக்கைகள் இன்றும் மக்கள் மத்தியில் உள்ளன. இந்த நம்பிக்கைகளில் எந்த அளவுக்கு உண்மை?
வயிறு பெரிதானால்  பெண்குழந்தை?
வயிறு பெரிதாக இருந்தால் பெண் குழந்தை என்றும், சிறியதாக இருந்தால் ஆண் குழந்தை என்றும் கூறுவார்கள். வயிறு பெரிதாக தெரிவதற்கு, உடல் பருமன், குழந்தையின் எடை, அதன் அளவு, பனிக்குட நீரின் அளவு என, பல காரணங்கள் உள்ளன. கருவின் சருமத்தைப் பாதுகாக்கும் தன்மைகள் பனிக்குட நீரில் உள்ளன.இதனுடன் கருவின் சிறுநீரும் கலந்திருக்கும். சர்க்கரை நோய் இருக்கும் தாயின் வயிற்றில், பனிக்குட நீர் சற்று அதிகமாகவே இருக்கும். இதனால், வயிறும் பெரியதாகத் தெரியும். பெண், ஆண் என்ற பாலினத்தைவைத்து, வயிற்றின் அமைப்பு மாற வாய்ப்பு இல்லை. குழந்தையின் எடை இரண்டரை முதல் மூன்று கிலோ வரை இருக்கலாம். இதற்கு மேல் எடை இருந்தால், வயிறு நிச்சயம் பெரியதாகவே தெரியும். 
பிரசவ வலி எடுத்து சீக்கிரம் பிறந்தால் ஆண் குழந்தையா?
எனது அனுபவத்தில் 80 சதவிகித பிரசவங்களில் வலி வந்த பிறகு தாமதிக்காமல் சீக்கிரம் பிறக்கும் குழந்தைகள் ஆண் பிள்ளையாகவே இருந்தன. பிரசவ வலி எடுத்தும் நீண்ட நேரம் கழித்துப் பிறக்கும் குழந்தைகள், பெண் குழந்தைகளாகவே இருந்தன. அனைவருக்கும் இந்தக் கருத்து பொருந்தும் என்று சொல்ல முடியாது. இதற்கானக் காரணங்கள் சரியாகத் தெரியவில்லை.
தாய் சுகபிரசவம் ஆகியிருந்தால்மகளுக்கும் சுகபிரசவம்தான் நடக்குமா?
அந்தக் காலத்தில் சுகப்பிரசவம் ஆகியிருந்த தாயின் உடல்நிலை, உணவுமுறை, வாழ்வியல் முறை வேறு. இன்று இருக்கும் பெண்களின் வாழ்வியல் முறை வேறு. மரபு ரீதியாக சுகபிரசவத்தைப் பொருத்திப்பார்க்க முடியாது. இன்றைக்கு சிசேரியன் செய்யப்படும் பெரும்பாலான பெண்கள் சுகப்பிரசவத்தில் பிறந்தவர்கள்தான்.
கர்ப்ப காலத்தில் இடது பக்கம்தான் படுக்கவேண்டும்
கர்ப்ப காலங்களில் இடது பக்கம் படுக்கச் சொல்லி மருத்துவர்கள் பரிந்துரைப்பார். இடது பக்கம் படுக்கும்போது, சீரான ரத்த ஓட்டம் குழந்தைக்குச் செல்லும். ஒரே பக்கம் படுத்து, கஷ்டமாக உணரும் சமயத்தில், கொஞ்சம் நேரத்துக்கு மாறி வலது பக்கம் படுக்கலாம். குப்புறப் படுத்தாலோ, மல்லாக்கப் படுத்தாலோ குழந்தைக்குச் செல்லும் ரத்த ஒட்டம் குறைந்து, பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். தாயின் உடலில் உள்ள ரத்த நாளங்களின் மேல் குழந்தையின் எடை விழுந்து, தாய்க்கும் பாதிப்புகள் ஏற்படும். இடது பக்கம் படுப்பதே குழந்தைக்கும், தாய்க்கும் பாதுகாப்பு. இடது பக்கம் படுக்கச் சொல்வது மூட நம்பிக்கை அல்ல. அறிவியல்பூர்வமான உண்மை.
தாயின் முகம் பொலிவாக இருந்தால், பெண் குழந்தையா?
முகத்தின் பொலிவுக்கும் பெண் குழந்தை பிறப்பதற்கும் சம்மந்தம் இல்லை. கர்ப்ப காலத்தில் தாயின் மகிழ்ச்சியான உணர்வே, முகம் பிரகாசிக்கக் காரணம். கர்ப்ப காலத்தில் வாந்தி, குமட்டல், மயக்கம் போன்ற எந்தத் தொந்தரவுகளும் இல்லாமல் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தால் முகம் மலர்ச்சியுடன்தான் இருக்கும்.
குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும்.
குங்குமப்பூ சாப்பிடலாமா என்று 10-ல் எட்டு பெண்கள் கேட்கின்றனர். அதில், இரும்பு சத்துக்கள் நிறைந்திருப்பதால், ரத்த உற்பத்திக்கு உதவும். சிவப்பு நிறத்தில் அம்மா, அப்பா இருந்தால் குழந்தையும் அதே நிறத்தில் பிறக்க வாய்ப்புகள் உண்டு. நிறத்தை நிர்ணயிப்பது பெற்றோர்களின் ஜீன்களே. சருமத்தின் நிறத்துக்குக் காரணம் மெலனின் என்ற நிறமி மட்டுமே. குங்கமப்பூ இல்லை.
பப்பாளி, அன்னாசி பழத்தைச் சாப்பிட்டால் கரு கலைந்துவிடுமா?
ஒரு முழு பப்பாளியையும், அன்னாசியையும் யாரும் சாப்பிடப் போவது இல்லை. ஒரு துண்டு என்ற கணக்கில் பழங்களைச் சாப்பிடுவதில் தவறு இல்லை. கருவைப் பாதிக்காது. அனைத்துப் பழங்களையும் சாப்பிடலாம். ஆனால், அளவுடன் சாப்பிடுவது முக்கியம்.
அடிக்கடி வாந்தி எடுத்தால் வயிற்றில் உள்ள குழந்தைக்கு அதிக முடி இருக்குமா?
கருவுற்றதன் விளைவை எதிரொலிக்கும் வகையில் சிலருக்கு வாந்தி, மயக்கம், குமட்டல் போன்ற பிரச்னைகள் இருக்கும். ஒவ்வொருவரின் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியின் அளவைப் பொறுத்து இது மாறுபடும்எனச் சொல்லலாம். குழந்தையின் முடிக்கும் வாந்தி வருவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

செவ்வாய், 9 ஜூன், 2015

சில ப‌ழங்களும் – பல பலன்களும்!



ப‌ழங்களும் அவற்றின் பலன்களும் – ப‌ழங்களும் அவற்றின் பலன்களு ம்
பழங்கள்- இயற்கை நமக்கு அளித்த கொடை. நாவுக்கு ருசியை தரும் பழங்களில், நோய்க்கு மருந்தும் இருக்கிறது என்பதால், அன்றாட உணவில், ஏதாவது ஒரு பழத்தையு ம் சேர்த்து கொண்டால் நல்லது என்கிறது, மருத்துவ
ஆராய்ச்சி முடிவுகள். எந்தெந்த பழங்களில் என்னென் ன பலன்கள் உள்ளன என்பதற்கு, இதோ சில டிப்ஸ்:
எலுமிச்சை
✔ அதிகமான பேதி ஏற்பட்டால், ஒரு எலுமிச்சைபழத் தின் சாறை, அரை டம்ளர் நீரில் கலந்துகொடுத்தால், உடனடியாக பேதி நின்றுவிடும். கடுமையான வேலை பளுவினால் ஏற்படும் களைப் பை போக்க, எலுமிச்சை பழத்தை கடித் து, சாற்றை உறிஞ்சி குடித்தால், உடனே களைப்பு தீரும்.
✔ கபம் கட்டி, இருமலால் கஷ்டப்படுகிறவர், ஒரு எலுமிச்சை பழச்சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலையாக தொடர்ந் து, 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கபம் வெளி யாகி நலம் ஏற்படும்.
திராட்சை
✔ பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்னைகளுக்கு, திராட்சைசாறு ஒரு சிறந்த மருந்து. தள்ளிப் போதல், குறை வாகவும், அதிகமாகவும்போதல் போன்ற குறைபா டுகளுக்கு, கருப்பு திராட்சை சாறு அரை டம்ளரில், சிறிது சர்க்கரை சேர்த்து, தினமும் வெறும் வயி ற்றில் சாப்பிட்டு வந்தால், முறையான கால இடை வெளியில் மாதவிலக்கு வெளியாகும். தொடர்ந்து, 21 நாட்கள் சாப்பிட வேண்டும்.
பேரீச்சை
✔தினமும், இரவில் படுக்க செல்லு ம்முன் , ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலையும், இரண்டு பேரீச்சம் பழத் தையும் உண்டுவந்தால், உடல்பல ம் பெறும். ரத்த விருத்தியும் உண் டாகும்.
✔ தோல் பகுதிகள் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்க, தினமு ம் பேரீச்சம் பழம் சாப்பிடலாம். கண் சம்பந்தமான கோளாறுகளும், நரம்பு சம்பந்தமான கோளாறு களும் நீங்கும்.
ஆரஞ்சு
✔ ஆரஞ்சில் வைட்டமின் ஏ, வைட்டமி ன் சி, பி மற்றும் பி-2 உள்ளன. இதில், சுண்ணாம்புச் சத்தும் அதிகம். பலநாள் வியாதியில் இருந்து எழுந்தவர்களுக் கு, இது இயற்கை அளித்த சத்து மருந் து.
✔ இரவில் துாக்கமில்லாமல் கஷ்டப்ப டுபவர், படுக்க போவதற்கு முன், அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட்டால், செமையாக துாக்கம் வரும்.
வாழை
✔ மலச்சிக்கல், மூலநோயால் பாதிக்கப்பட்டவர், தின மும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது. தினமும் இரவு உணவிற்கு பின், ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால், ஜீரண சக்தி உண்டாகும்.
✔ கண் பார்வை குறைய ஆரம்பித்தவுடன், தி னசரி உணவில்செவ்வாழை ப் பழம் வேளைக்கு ஒன்று வீதம், 21 நாட்களுக்கு கொ டுத்து வந்தால், பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தெ ளி வடைய ஆரம்பிக்கும்.
பலா
✔ இதில் வைட்டமின் ஏ மற்றும் உயிர்ச்சத்து அதிகம். சாப்பிட்டால் உடல் வளர்ச்சி சீரடையு ம். வைட்டமின் ‘ஏ’க்கு, தொற்று கிருமிக ளை அழிக்கும் சக்தி இருப்பதால், உடலில் நோய் தொற்றாது.
பப்பாளி
✔ ஆண்டு முழுவதும் கிடைக்கக் கூடியது. பல் தொடர்பான குறை பாட்டுக்கும், சிறுநீர்ப் பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி உதவும். நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை அதிகரிக்கவும், ரத்த விரு த்தி உண்டாகவும், ஞாபக சக்தியை பெருக் கவும் பப்பாளி கை கொடுக்கும்.
✔ பப்பாளி பழத்தில், இயற்கையாகவே விஷக் கிருமிகளை கொல்லும், ஒரு வகை சத்து உள்ளது. பப்பாளி பழம் சாப் பிடுபவர்களின் ரத்தத்தில், நோய் கிருமி கள் தங்குவதை அது தடுத்து விடும்.
மாதுளை
✔ மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கு ம் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர், தொடர்ந்து மூன்று நாள் மாதுளம் பழம் சாப்பிட் டால், குணம் பெறலாம்.
✔ வறட்டு இருமல் உள்ளவர் தொடர்ந்து, மூன்று நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் இருமல் குண மாகும். பித்தம் சம்பந்தமான குறைபாட்டிற்கும் மாதுளம் பழம் ஏற்றது.
கொய்யா
✔ எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும் அளிக்கும். சொறி, சிரங்கு, ரத்த சோகை இருப்ப வர்கள் கொய்யாப்பழம் உண்பது நல்லது. விஷ கிருமிகளை கொல்லும் சக்தி கொய்யாப் பழத்தி ற்கு இருப்பதால், வியாதியை உண்டு பண்ணும் விஷக் கிருமிகள் ரத்தத்தில் கலந்தால், அதை உடனே கொன்று விடும்.
அன்னாசி
✔ உடலில் போதிய ரத்தம் இல்லாமல் இருப்பவர்களுக்கு, அன்னாசிப்பழம் சிறந்த டானிக். நன்றாக பழுத்த அன் னாசி பழத்தை, சிறுசிறு துண்டுகளா க செய்து வெயிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து, தின மும் இரவில் ஒரு டம்ளர் பாலில், ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து பருக வேண்டும்; 40 நாட்க ளில் ரத்தம் அதிகரித்திருக்கும்.