செவ்வாய், 9 ஜூன், 2015

சில ப‌ழங்களும் – பல பலன்களும்!



ப‌ழங்களும் அவற்றின் பலன்களும் – ப‌ழங்களும் அவற்றின் பலன்களு ம்
பழங்கள்- இயற்கை நமக்கு அளித்த கொடை. நாவுக்கு ருசியை தரும் பழங்களில், நோய்க்கு மருந்தும் இருக்கிறது என்பதால், அன்றாட உணவில், ஏதாவது ஒரு பழத்தையு ம் சேர்த்து கொண்டால் நல்லது என்கிறது, மருத்துவ
ஆராய்ச்சி முடிவுகள். எந்தெந்த பழங்களில் என்னென் ன பலன்கள் உள்ளன என்பதற்கு, இதோ சில டிப்ஸ்:
எலுமிச்சை
✔ அதிகமான பேதி ஏற்பட்டால், ஒரு எலுமிச்சைபழத் தின் சாறை, அரை டம்ளர் நீரில் கலந்துகொடுத்தால், உடனடியாக பேதி நின்றுவிடும். கடுமையான வேலை பளுவினால் ஏற்படும் களைப் பை போக்க, எலுமிச்சை பழத்தை கடித் து, சாற்றை உறிஞ்சி குடித்தால், உடனே களைப்பு தீரும்.
✔ கபம் கட்டி, இருமலால் கஷ்டப்படுகிறவர், ஒரு எலுமிச்சை பழச்சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலையாக தொடர்ந் து, 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கபம் வெளி யாகி நலம் ஏற்படும்.
திராட்சை
✔ பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்னைகளுக்கு, திராட்சைசாறு ஒரு சிறந்த மருந்து. தள்ளிப் போதல், குறை வாகவும், அதிகமாகவும்போதல் போன்ற குறைபா டுகளுக்கு, கருப்பு திராட்சை சாறு அரை டம்ளரில், சிறிது சர்க்கரை சேர்த்து, தினமும் வெறும் வயி ற்றில் சாப்பிட்டு வந்தால், முறையான கால இடை வெளியில் மாதவிலக்கு வெளியாகும். தொடர்ந்து, 21 நாட்கள் சாப்பிட வேண்டும்.
பேரீச்சை
✔தினமும், இரவில் படுக்க செல்லு ம்முன் , ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலையும், இரண்டு பேரீச்சம் பழத் தையும் உண்டுவந்தால், உடல்பல ம் பெறும். ரத்த விருத்தியும் உண் டாகும்.
✔ தோல் பகுதிகள் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்க, தினமு ம் பேரீச்சம் பழம் சாப்பிடலாம். கண் சம்பந்தமான கோளாறுகளும், நரம்பு சம்பந்தமான கோளாறு களும் நீங்கும்.
ஆரஞ்சு
✔ ஆரஞ்சில் வைட்டமின் ஏ, வைட்டமி ன் சி, பி மற்றும் பி-2 உள்ளன. இதில், சுண்ணாம்புச் சத்தும் அதிகம். பலநாள் வியாதியில் இருந்து எழுந்தவர்களுக் கு, இது இயற்கை அளித்த சத்து மருந் து.
✔ இரவில் துாக்கமில்லாமல் கஷ்டப்ப டுபவர், படுக்க போவதற்கு முன், அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட்டால், செமையாக துாக்கம் வரும்.
வாழை
✔ மலச்சிக்கல், மூலநோயால் பாதிக்கப்பட்டவர், தின மும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது. தினமும் இரவு உணவிற்கு பின், ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால், ஜீரண சக்தி உண்டாகும்.
✔ கண் பார்வை குறைய ஆரம்பித்தவுடன், தி னசரி உணவில்செவ்வாழை ப் பழம் வேளைக்கு ஒன்று வீதம், 21 நாட்களுக்கு கொ டுத்து வந்தால், பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தெ ளி வடைய ஆரம்பிக்கும்.
பலா
✔ இதில் வைட்டமின் ஏ மற்றும் உயிர்ச்சத்து அதிகம். சாப்பிட்டால் உடல் வளர்ச்சி சீரடையு ம். வைட்டமின் ‘ஏ’க்கு, தொற்று கிருமிக ளை அழிக்கும் சக்தி இருப்பதால், உடலில் நோய் தொற்றாது.
பப்பாளி
✔ ஆண்டு முழுவதும் கிடைக்கக் கூடியது. பல் தொடர்பான குறை பாட்டுக்கும், சிறுநீர்ப் பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி உதவும். நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை அதிகரிக்கவும், ரத்த விரு த்தி உண்டாகவும், ஞாபக சக்தியை பெருக் கவும் பப்பாளி கை கொடுக்கும்.
✔ பப்பாளி பழத்தில், இயற்கையாகவே விஷக் கிருமிகளை கொல்லும், ஒரு வகை சத்து உள்ளது. பப்பாளி பழம் சாப் பிடுபவர்களின் ரத்தத்தில், நோய் கிருமி கள் தங்குவதை அது தடுத்து விடும்.
மாதுளை
✔ மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கு ம் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர், தொடர்ந்து மூன்று நாள் மாதுளம் பழம் சாப்பிட் டால், குணம் பெறலாம்.
✔ வறட்டு இருமல் உள்ளவர் தொடர்ந்து, மூன்று நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் இருமல் குண மாகும். பித்தம் சம்பந்தமான குறைபாட்டிற்கும் மாதுளம் பழம் ஏற்றது.
கொய்யா
✔ எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும் அளிக்கும். சொறி, சிரங்கு, ரத்த சோகை இருப்ப வர்கள் கொய்யாப்பழம் உண்பது நல்லது. விஷ கிருமிகளை கொல்லும் சக்தி கொய்யாப் பழத்தி ற்கு இருப்பதால், வியாதியை உண்டு பண்ணும் விஷக் கிருமிகள் ரத்தத்தில் கலந்தால், அதை உடனே கொன்று விடும்.
அன்னாசி
✔ உடலில் போதிய ரத்தம் இல்லாமல் இருப்பவர்களுக்கு, அன்னாசிப்பழம் சிறந்த டானிக். நன்றாக பழுத்த அன் னாசி பழத்தை, சிறுசிறு துண்டுகளா க செய்து வெயிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து, தின மும் இரவில் ஒரு டம்ளர் பாலில், ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து பருக வேண்டும்; 40 நாட்க ளில் ரத்தம் அதிகரித்திருக்கும்.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்க



உடலில்அதிகமான அசதி. எந்தசெயலை செய் ய வேண்டுமானாலும், பிறகு செய்துகொள்ள லாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற் சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்ப தற்கு கூட எழுந் துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப் பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவே ண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய
சோம்பேறித்தனம். இந்த நிலையில் தான் இன்று பலபேர் இருக்கின்றனர்.
இந்த நிலைமையை நீக்க, மருத்து வரிடம் சென்று இதற்கு ஏதாவது மாத்திரை, மருந்து வாங்கி சாப்பிட லாம் என்று, மருத்துவமனையில் வரிசையில் காத்திருந்து அவரை பார்த்தால் பல பரிசோதனைகளை செய்யச் சொல்லுவார். அவர் கூறிய பரிசோனைகள் அனைத்தும்செய்து, அந்த பரிசோதனைகள் அ னைத்தும் அவரிடம் காண்பித்தால், உங்களுக்கு ரத்தத்தில் ஹீமோ குளோபின் குறைவாக இருக்கிற து என்று கூறுவார். நான் உங்களுக்கு மாத்திரை, மருந்து எழுதித்தருகிறேன். ஆறு மாதங்கள் சாப்பிடுங்கள் சரியாகிவிடும் என்பார். அவர் கொடுக்கும் அதிக விலையு ள்ள மாத்திரைகளையும், மருந்துக ளையும் விலை கொடுத்து வாங்கி, அவருக்குரிய கட்டணத்தையும் கொடுத்து, ஆறுமாதம் சாப்பிட்டா லும் ஏதோ சிறிது பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு உள்ள தேதவிர, மறுபடியும் பழைய நிலை யில் பாதிகூட சரியாகவில்லை.
நமது உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது அந்த அணுக்கள் குறைந்த ரத்தம் உடல் முழுவ தும் உற்சாகமாக ஓட முடிவதில்லை. நமது உடலின் பாகங்கள்சுறுசுறுப்பாக இயங்கமுடிவதில்லை. உடல் களைப்பு அடைகிறது. பத்து பேர்கள் செய்ய வேண்டிய வேலையை இருவர் செய்வார்க ளானால், எவ்வளவு தாமதம் ஆகுமோ, எவ்வ ளவு தடங்கல் ஏற்படுமோ, அதே தடங்கலும், தாமதமும் நம் உடலில் ஏற்படுகிறது. உட லில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது மேலே குறிப்பிட்ட அத்தனை குறைபாடுகளு ம் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுகிறது.
நமது உடல் அதற்கு தேவையான சத்துக்க ளை, நாம் உட்கொள்ளும் ஆகாரத்திலிருந்து பிரித்து எடுத்துக் கொ ள்ளுகிறது. எவ்வளவு சத்துக்கள், எந்தெந்த சத்துக்கள் தேவையோ, அந்தளவு மட்டும் உறிஞ்சி எடுத்து க்கொண்டு, மீதி உள்ளவற்றை கழி வுபொருட்களாக உடலிருந்து வெ ளியேற்றி விடுகிறது. அதிகமான சத்துக்களை நாம் உண்டாலும், அத்தனை அளவு சத்துக்களையும் உடல் ஏற்றுக்கொள்வதில்லை. மீதி யை கழிவுப் பொருட்களாக தள்ளி விடுகிறது.
ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 – 18 கிராம் அளவி லும், பெண்களுக்கு 12 – 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே கு றையும் பொழுது, இரத்த சோகை என்ற நோயும், ம ற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. ரத்தத்தில் எவ்வளவு அளவு ஹீமோ குளோபின் இருக்கிறது என்பதை சோதனைச் சாலையில் ரத்தத்தை பரிசோதி க்கும் பொழுது தெரியவரும். ஹீமோகுளோ பின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொ ழுது, உடல் மெலி ந்து, களைப்பு, இய லாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கி ன்றன.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிக ரிக்கும் பொழுது ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தி ன்போது நுரையீரலுக்குச்சென்று நா ம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும் போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை ரத்தம் ஏற்று உற்சாகம் பெறு கிறது. பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன் னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை கார்பன்டை ஆக்ûஸடு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெ ளியேற்றுகிறது. பிறகு உற்சாக ரத்த ஓட் டமாக மாறி உடலுக்கு சக்தியூட்டுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை ரத்தத்தில் ஏற்றுக்கொண் டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழ ங்கி, அவைகளை நன்கு இயக்கி, உடலு க்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கி றது.
உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திரா ட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழ ங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழ ங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழு வதும் ஊற விடுங்கள். காலையில் 6 மணிக்கு பல் துலக்கிவிட்டு, காலை ஒருபழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம்ஊறிய நீரை குடியுங்கள். பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாகஉள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியு ங்கள். இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்க ளை தின்றுவிட்டு, பழம் ஊறியநீரை குடியுங்கள்.
ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடு த்துக்கொண்டு அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணி க்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள், காலை யில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்று விட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங் கள்.
மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்று விட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணி க்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடி யுங்கள். இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள். நாட்கள் காலை 6மணி, மதியம் 12 மணி, மாலை 6 மணி.
1-வது நாள் 1, 1, 1, -3.
2-வது நாள் 2, 2, 2, = 6.
3-வது நாள் 3, 3, 3, = 9.
4-வது நாள் 4, 4, 4, = 12.
5-வது நாள் 4, 4, 4, = 12.
6-வது நாள் 4, 4, 4, = 12.
7-வது நாள் 3, 3, 3, = 9.
8-வது நாள் 2, 2, 2, = 6.
9-வது நாள் 1, 1, 1, = 3.
ஒன்பதுநாட்கள் செய்துமுடித்தபிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப்பாருங்கள். தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்க ள். இப்பொழுது உங்கள் ரத்தத்தில்ஹீமோ குளோபின்கள் திருப்தியான அளவில் உய ர்ந்து இருக்கும். இந்த ஹீமோகுளோபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும்.
உடலில்உற்சாகம்பெருகும். வலிவோடும், வனப்போடும் உடல் மிளிரும். இப்படி செய் து இருந்தும் கருப்பு திராட்சை ஊறிய நீர், ரத் தத்தில் கலந்து ஹீமோகுளோபின்கள் உருவாக காரணமாக இருக் கும் செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் ஹீமோ குளோபினை அதிகரிக்கலாம்.