திங்கள், 20 ஏப்ரல், 2015

உலர்திராட்சை



நாட்டு மருந்து கடைகளிலும் மளிகை கடைகளிலும் எளிதாக கிடைக்கக் கூடியதுமான உலர் திராட்சை. இந்த உலர் திராட்சை, நமது ஆரோக்கிய த்திற்கு ஏற்ற‍
உணவாகவும் பயன்படுகிறது. அத்தகைய ஒரு பயனைத்தான் நீங்கள் கீழே பார்க்க‍விருக்கிறீர்கள்.
எலும்பு மஞ்ஜைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாற்றினை விழுங்கினால், நமது உடலில் உள்ள‍ எலும்பு மஞ் ஜைகள் பலமடைந்து இரத்தம் அதிகம் சுரக்கும். மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
மேலும்  ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமாகும். இதில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

திங்கள், 13 ஏப்ரல், 2015

சளி, இருமல் போக்கும் அகத்திக்கீரை சாறு

Posted By Muthukumar,On April 13,2015

சளி, இருமல் தொல்லைகள் எல்லோருக்கும் சர்வ சாதாரணமாக வரக்கூடிய பிரச்னையாகும். இதை குணமாக்க ஆங்கில மருந்துகளை விட இயற்கை மருத்துவம் சிறந்ததாகும். இருமல், இளைப்பு, ஆஸ்துமா ஆகியவை குணமாக, தொண்டை வேரை இடித்து நல்லெண்ணெய்யில் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் மூக்கடைப்பு, தொண்டைக்கட்டு, தலைவலி ஆகிய நோய்கள் குணமாகும்
ஆடாதொடை வேர், கண்டங்கத்திரி வேர், திப்பிலி ஆகிய மூன்றையும் ஒன்றாக பொடி செய்து சாப்பிட்டால் இருமல் நிற்கும். ஆடாதொடை இலையை பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் சளித்தொல்லை தீரும். அவரை இலைச்சாற்றை துணியில் நனைத்து, நெற்றியில் பற்று போட்டு வந்தால் தலைவலி, தலைபாரம், சைனஸ் பிரச்னைகள் தீரும். ஒரு பிடி அருகம்புல்லை இடித்து சாறு எடுத்து, வெறும் வயிற்றில் குடித்தால் சளி, சைனஸ் ஆகியவை சரியாகும்.
அதி மதுரம், ஆடாதொடை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து, தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் தொண்டையில் ஏற்படும் அனைத்து நோய்களும் குணமாகும். திப்பிலி, சுக்கு, சித்தரத்தை அனைத்தையும் சம அளவில் எடுத்து, கஷாயம் வைத்துக் குடித்தால் காய்ச்சல், சளி, இருமல், நுரையீரல் நோய்கள் குணமாகும்.
அகத்திக் கீரை சாறு மற்றும் அகத்திப் பூ சாறு இரண்டிலும் தேன் கலந்து குடித்தால் தொடர் தும்மல் நிற்கும்.